/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிக்கெட் பரிசோதகர் மர்ம மரணம் பொன்னேரி போலீஸ் விசாரணை
/
டிக்கெட் பரிசோதகர் மர்ம மரணம் பொன்னேரி போலீஸ் விசாரணை
டிக்கெட் பரிசோதகர் மர்ம மரணம் பொன்னேரி போலீஸ் விசாரணை
டிக்கெட் பரிசோதகர் மர்ம மரணம் பொன்னேரி போலீஸ் விசாரணை
ADDED : டிச 16, 2024 01:38 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி நானாபூர், 35; இவர் ரயில்வே துறையில், பொன்னேரி ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர்.கடந்த மாதம் இறுதியில், சொந்த ஊருக்கு சென்றனர். ரவிநானாபூர் தனியாக இருந்தார்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி, இவரது குடும்பத்தினர், ரவி நானாபூரை மொபைலில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. அடுத்து வந்த இரண்டு நாட்களும் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
ரவி நானாபூரின் மனைவி, வீட்டின் அருகில் வசிப்பவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது, மூன்று நாட்களாக வீடு மூடிய நிலையில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
அதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, இது குறித்து ரயில்வே நிர்வாகத்தின் வாயிலாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொன்னேரி போலீசார் அங்கு சென்று, வீட்டின் உள்ளே பார்த்தபோது, ரவிநானாபூர் இறந்த நிலையில் கிடப்பதை கண்டனர்.
அவரது உடலை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மர்மமான முறையில் இறந்த கிடந்த ரவிநானாபூர், இறப்பு குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

