/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி நீர்த்தேக்க கரை சீரமைப்பு
/
பூண்டி நீர்த்தேக்க கரை சீரமைப்பு
ADDED : ஜூலை 25, 2025 01:31 AM

திருவள்ளூர்:பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் கரைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, கொசஸ்தலை ஆற்றின் நடுவில், பூண்டி நீர்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உருவாகும் கொசஸ்தலை ஆற்றில், மழை காலத்தில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர், பூண்டியில் சேகரிக்கப்படுகிறது.
மேலும், கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீரும், அங்கு சேகரிக்கப்பட்டு, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, பெய்த வடகிழக்கு பருவமழையால், பூண்டி நீர்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, உபரி நீர், 16 ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்பட்டது.
அப்போது, நீர்கேத்தின் இருபுறமும் ஆற்றின் கரைகள், மழையால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், கரையோரம் சேதமடைந்தது.
இந்நிலையில் சில மாதங்களில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. அப்போது, ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், கரைகள் மேலும் சேதமடையும் அபாயம் உள்ளது. இதையடுத்து, வரும் மழை காலத்திற்குள், சேதமடைந்த கரையை சீரமைக்கும் பணியை நீர்வளத்துறையினர் துவக்கி உள்ளனர். பொக்லைன் இயந்திரம் வாயிலாக, கரை பலப்படுத்தும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.