/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைப்பு
/
பூண்டி தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைப்பு
ADDED : நவ 27, 2024 10:04 PM
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, சாய்கங்கை கால்வாய் வாயிலாக கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது.
அவ்வப்போது பெய்து வரும் மழையால், அணைக்கட்டிற்கு நீர்வரத்து ஏற்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 350 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு சென்று கொண்டு இருந்தது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு, வினாடிக்கு, 100 கன அடியாக குறைக்கப்பட்டது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 190 கன அடி வீதமும், மழைநீர் 100 கன அடி என மொத்தம், 290 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய கொள்ளளவு, 0.470 டி.எம்.சி., நீர்மட்டம், 22.12 அடி. இணைப்பு கால்வாய் வாயிலாக, வினாடிக்கு, 100 கன அடி வீதம் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.