/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காவல் துறையை கண்டித்து பூங்குளம் வாசிகள் போராட்டம்
/
காவல் துறையை கண்டித்து பூங்குளம் வாசிகள் போராட்டம்
காவல் துறையை கண்டித்து பூங்குளம் வாசிகள் போராட்டம்
காவல் துறையை கண்டித்து பூங்குளம் வாசிகள் போராட்டம்
ADDED : பிப் 14, 2025 02:27 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பூங்குளம் ரெட்டிப்பாளையம் கிராமத்தில், 60 குடும்பங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில் ஆறு ஏக்கர் அரசு நிலம், காலியாக உள்ளது.
இதை பூங்குளம் கிராமத்தின் அருகில் உள்ள சின்ன மாங்கோடு கிராமத்தை சேர்ந்த வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வருவாய்த்துறை திட்டமிட்டது.
இதற்கு பூங்குளம் ரெட்டிப்பாளையம் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, 'தங்கள் கிராமத்தில் வீடு இல்லாமல் ஏராளமனோர் இருக்கின்றனர். வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்' என அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், வருவாய்த்துறையினர் பூங்குளம் ரெட்டிப்பாளையம் கிராமத்தில், மேற்கண்ட அரசு நிலத்தில் வருவாய்த்துறையினர் அளவீடு பணிகளை மேற்கொண்டனர்.
இதற்கு பூங்குளம் ரெட்டிப்பாளையய கிராமத்தினர் ஆட்சேபனை தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்கு வந்த சின்னமாங்கோடு கிராமத்தை சேர்ந்த சிலர், ரெட்டிப்பாளையம் கிராம பெண்களை அவதுறாக பேசி, கீழே தள்ளி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பூங்குளம் ரெட்டிப்பாளையம் கிராமத்தினர், காவல் துறையில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
அதையடுத்து நேற்று பாதிக்கப்பட்டவர்கள் பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டனர்.
பொன்னேரி வட்டாட்சியர் சிவக்குமார், சப்-கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமவாசிகளிடம் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, கிராமவாசிகள் போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.