/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்குன்றத்தில் கால்வாய் பராமரிப்பு மோசம் கொசஸ்தலைக்கு மழைநீர் செல்வதில் சிக்கல்

ADDED : நவ 28, 2024 12:38 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தில் உள்ள ஏரியின் கலங்கலில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு செல்கிறது.
மேற்கண்ட கால்வாய் உரிய பராமரிப்பு இன்றி மரங்கள், செடிகள் சூழ்ந்து கிடக்கிறது. கரைகள் பலவீனம் அடைந்து மழையில் கரைந்து வருகிறது.
செக்கஞ்சசேரி கிராமத்தில் மேற்கண்ட கால்வாயின் இருபுறமும் கரைகளை ஒட்டி பட்டா நிலங்களில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த கால்வாயின் கரைகள் கரைவதால், குடியிருப்புவாசிகள் தங்களது செலவில் மணல் மூட்டைகளை கட்டி போட்டி தங்களது வீடுகளை பாதுகாத்துக்கொள்ளும் நிலையில் இருக்கின்றனர்.
கால்வாய் பராமரிப்பு இன்றி கிடப்பதால், மழைநீர் ஆற்றிற்கு செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. கால்வாயில் உள்ள புதர்களை அகற்றி, கரைகளை பலப்படுத்தி தரவேண்டும் என நீர்வளத்துறையினரிடம் கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இன்றி உள்ளது.
மழைக்காலம் வந்தால், கால்வாயை ஒட்டி பட்டா நிலங்களில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. மேற்கண்ட கால்வாய் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.