/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகரத்தில் கால்வாய் பராமரிப்பு மோசம் கொசஸ்தலைக்கு மழைநீர் செல்வதில் சிரமம்

ADDED : நவ 09, 2024 01:31 AM

பொன்னேரி:சோழவரம் அடுத்த அகரம் கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் அங்குள்ள கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு கொண்டு செல்லப்படும்.
மேற்கண்ட கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளது. கால்வாய் முழுதும் செடிகள், மரங்கள் வளர்ந்து காடுபோல் மாறி இருக்கிறது. குப்பை கழிவுகளும் சேர்ந்து, துார்ந்து உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் மழைநீர் கொசஸ்தலை ஆற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
விவசாய நிலங்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீரை கால்வாய் வழியாக வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பல ஆண்டுகளாக கால்வாயை துார்வார சீரமைத்து தர வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால் அவர்கள் அதிருப்தியிலும் உள்ளனர்.
புதரில் மறைந்தும், குப்பையால் துார்ந்தும் கிடக்கும் கால்வாயை உடனடியாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.