sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வியாபாரிகள் சங்கம் சார்பில்ஏழை மாணவர்களுக்கு உதவி

/

வியாபாரிகள் சங்கம் சார்பில்ஏழை மாணவர்களுக்கு உதவி

வியாபாரிகள் சங்கம் சார்பில்ஏழை மாணவர்களுக்கு உதவி

வியாபாரிகள் சங்கம் சார்பில்ஏழை மாணவர்களுக்கு உதவி


ADDED : ஜூலை 24, 2011 02:21 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பில், ஏழை மாணவர்கள் 1,500 பேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.பள்ளிப்பட்டை அடுத்த ஆர்.கே.பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, நோட்டு புத்தகம் வழங்கும் விழா வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.மதிப்பியல் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

இணைச் செயலர் வெங்கடேசலு வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா மற்றும் பொதுச் செயலர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.ஆர்.கே.பேட்டை, செல்லாட்டூர், ராஜாநகரம், வி.புதூர், மோரகுப்பம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவ, மாணவியர் 1,500 பேருக்கு நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.அரிமா சங்க மாவட்ட முதன்மை துணை கவர்னர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, அறிவியல் சம்பந்தப்பட்ட விளக்க உரையாற்றினார், வியாபாரிகள் சங்கச் செயலர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us