/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தபால் நிலைய பெண் உதவியாளருக்கு பாலியல் தொந்தரவு: போலீசில் புகார்
/
தபால் நிலைய பெண் உதவியாளருக்கு பாலியல் தொந்தரவு: போலீசில் புகார்
தபால் நிலைய பெண் உதவியாளருக்கு பாலியல் தொந்தரவு: போலீசில் புகார்
தபால் நிலைய பெண் உதவியாளருக்கு பாலியல் தொந்தரவு: போலீசில் புகார்
ADDED : செப் 28, 2024 07:32 PM
திருவள்ளூர்:உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நேஹாராணி, 28. இவர், திருவள்ளூர் அடுத்த காக்களூர் துணை தபால் நிலையத்தில், தபால் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
திருவள்ளூர் தபால் துறை கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளராக பணிபுரியும் கவுசிக் என்பவர், கடந்த, 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள், காக்களூர் அலுவலகத்திற்கு ஆய்வு பணி மேற்கொண்டார்.
அப்போது, தன்னிடம் கவுசிக் தொந்தரவு கொடுத்ததாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், நேஹாராணி திருவள்ளூர் தாலுகா போலீசில், நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.