/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலை அரங்கமாக மாறிய பொதட்டூர் பஸ் நிலையம்
/
கலை அரங்கமாக மாறிய பொதட்டூர் பஸ் நிலையம்
ADDED : செப் 13, 2025 01:24 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம் கலை அரங்கமாக மாற்றப்பட்டு, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் மற்றும் 25 அடி உயரத்தில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.
ஒரு வாரமாக பொதட்டூர்பேட்டையில் அம்மன் ஜாத்திரை திருவிழா நடந்து வந்தது.
இதில், தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அம்மன் வீதியுலாவும் நடந்தன.
நேற்று முன்தினம் இரவு பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், திரையிசை கச்சேரி நடத்தப்பட்டது. 10,000 சதுர அடி பரப்பிற்கு ஒரே கூரையாக பேருந்து நிலையத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தி, பேருந்து நிலையத்தை கலையரங்கமாக பகுதிமக்கள் பயன்படுத்தி கொண்டனர். இங்கு நடந்த கலைநிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.
பேருந்து நிலையத்தில் உள்ள இரண்டடுக்கு வணிக வளாகத்தை பார்வையாளர் மாடமாக பயன்படுத்தி, ஏராளமானோர் அமர்ந்திருந்தனர். கூரையின் கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, அரங்கம் பிரகாசமாக ஜொலித்தது.
திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை, பாரம்பரியமாக நடத்தும் ரத யாத்திரை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், இஷ்டதெய்வத்தின் வேடமணிந்து வீதியில் வலம் வந்தனர்.