/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் வாகனங்கள் நிறுத்தமான பொதட்டூர்பேட்டை பஸ் நிலையம்
/
தனியார் வாகனங்கள் நிறுத்தமான பொதட்டூர்பேட்டை பஸ் நிலையம்
தனியார் வாகனங்கள் நிறுத்தமான பொதட்டூர்பேட்டை பஸ் நிலையம்
தனியார் வாகனங்கள் நிறுத்தமான பொதட்டூர்பேட்டை பஸ் நிலையம்
ADDED : அக் 13, 2025 01:11 AM

பொதட்டூர்பேட்டை:பிரமாண்டமான கூரையுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அங்கு இருக்கை வசதி இல்லாததால், பயணியர் தரையில் அமர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில், பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம், 1.50 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டது. இதில், 18 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் மற்றும் 25 அடி உயரத்தில் பிரமாண்டமான கூரையும் பொருத்தப்பட்டுள்ளது.
கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களாகியும், தற்போது வரை திறப்பு விழா நடத்தப்படவில்லை.
இதனால், கடைகள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகின்றன.
மேலும், தனியார் வாகனங்கள், பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்துவதால், பேருந்துகளில் பயணிக்க காத்திருக்கும் பயணியர், கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தனியார் வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில், பயணியர் முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்க செல்லும் நிலை உள்ளது. மேலும், பயணியருக்கு போதிய இருக்கை வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால், பயணியர் தரையில் அமர்ந்து, பேருந்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.
எனவே, தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும். மேலும், இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.