/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடி சந்திப்பில் அமைத்த சிமென்ட் கல் சாலை சேதம்
/
ஆவடி சந்திப்பில் அமைத்த சிமென்ட் கல் சாலை சேதம்
ADDED : அக் 13, 2025 01:10 AM

திருவள்ளூர்:ஆவடி சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட சிமென்ட் கல் சாலை, மூன்று மாதங்களிலேயே சேதமடைந்துள்ளது.
சென்னை பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் பெரியகுப்பம் ரயில் நிலைய பகுதிகளில் இருந்து திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி செல்லும் வாகனங்கள், ஜே.என்.சாலை வழியாக பயணிக்கின்றன.
ஜே.என்.சாலை - ஆவடி புறவழிச்சாலை சந்திப்பு பகுதி குறுகலாக இருந்ததால், ஆவடியில் இருந்து வரும் வாகனங்களும், ஜே.என்.சாலையில் இருந்து, அச்சாலை வழியாகபிரியும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிதவித்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மேலும், சாலை சந்திப்பு இடம் அகலப்படுத்தப்பட்டது.
சாலையோரம் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில், சிறிய அளவிலான சிமென்ட் தடுப்பு அமைக்கப்பட்டது.
மேலும் சாலையின் இருபுறமும் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சாலை அமைத்த மூன்று மாதத்திற்குள், சிமென்ட் கல் சாலை ஆங்காங்கே உடைந்து, சேதமடைந்து உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்த சிமென்ட் கல் சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.