/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
6 மாதமாக 'வாட்டர் ஹீட்டர்' பழுது திருத்தணி முருகன் கோவிலில் அவலம்
/
6 மாதமாக 'வாட்டர் ஹீட்டர்' பழுது திருத்தணி முருகன் கோவிலில் அவலம்
6 மாதமாக 'வாட்டர் ஹீட்டர்' பழுது திருத்தணி முருகன் கோவிலில் அவலம்
6 மாதமாக 'வாட்டர் ஹீட்டர்' பழுது திருத்தணி முருகன் கோவிலில் அவலம்
ADDED : அக் 13, 2025 01:08 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், முடி காணிக்கை மண்டபத்தில், ஆறு மாதமாக சுடு தண்ணீர் வழங்கும், 'வாட்டர் ஹீட்டர்' இயந்திரம் பழுதாகி உள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடிகாணிக்கை செலுத்துகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு முதல் முறையாக முடி காணிக்கையும் செலுத்துகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலில், படா செட்டிக்குளம் பகுதியில், 1 கோடி ரூபாய் மதிப்பில், முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அங்கு, பக்தர்கள் குளிப்பதற்கும், இயற்கை உபாதைகள் கழிப்பதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் குளிப்பதற்கு சுடுதண்ணீர் மற்றும் சாதாரண தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆறு மாதமாக சுடு தண்ணீர் வழங்கும், 'வாட்டர் ஹீட்டர்' இயந்திரம் பழுதாகி உள்ளது.
குறிப்பாக, குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு, பெற்றோர் சுடுதண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். சில பக்தர்கள் மலைக்கோவிலில் உள்ள தனியார் விடுதிகளுக்கு சென்று, பணம் கொடுத்து சுடுதண்ணீர் வாங்கி வந்து குளிக்க வேண்டியுள்ளது.
எனவே, குழந்தைகளின் நலன் கருதி, கோவில் நிர்வாகம், பழுதடைந்த சுடுதண்ணீர் இயந்திரத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.