/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
/
தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
ADDED : அக் 12, 2025 10:20 PM
மீஞ்சூர்:காஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீஞ்சூர் அடுத்த காட்டூரைச் சேர்ந்தவர் காசியம்மாள், 67. இவர், வீட்டின் அருகே மீன் கடை வைத்துள்ளார். கடந்த 8ம் தேதி, இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் லலிதா, 70, மீன் வாங்க வந்திருந்தார்.
அப்போது, காசியம்மாள் வீட்டின் உள்ளே காஸ் கசிந்து, துர்நாற்றம் வீசியதை அறிந்து, இருவரும் வீட்டிற்குள் சென்றனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தால், இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். உடனே, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், 60 சதவீத தீக்காயங்களுடன் லலிதா கவலைக்கிடமாக இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, சிகிச்சை பலனின்றி லலிதா உயிரிழந்தார்.
காசியம்மாள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.