/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நல்லுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
நல்லுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
நல்லுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
நல்லுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : நவ 10, 2025 01:52 AM

சோழவரம்: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நல்லுார் கிராமம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் வாகன ஓட்டிகள் வளைந்து வளைந்து சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.
சோழவரம் அடுத்த டோல்கேட் பகுதியில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நல்லுார் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இச்சாலையின் பல்வேறு பகுதிகளில், பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வாகன ஓட்டிகள் பள்ளங்களை தவிர்க்க வலது, இடது என, மாறி மாறி பயணித்து தடுமாற்றம் அடைகின்றனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
மழைக்காலம் என்பதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், கூடுதல் சிரமங்களும், தடுமாற்றமும் ஏற்படுகிறது.
பள்ளங்களை தவிர்க்க வாகன ஓட்டிகள் வலது, இடது என செல்லும்போது, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இச்சாலையை, சோழவரம் ஒன்றிய நிர்வாகம் சீரமைப்பதில் அலட்சியம் காட்டுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

