/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காவலர் தேர்வில் 540 பேர் 'ஆப்சென்ட்'
/
காவலர் தேர்வில் 540 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 10, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், நேற்று நடந்த காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வில், 540 பேர் தேர்வு எழுத வரவில்லை.
சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. திருவள்ளூரில் உள்ள மூன்று மையங்களில் தேர்வு நடந்தது.
இதில், 2,708 பேர் தேர்வு எழுதினர். 540 பேர் தேர்வு எழுத வரவில்லையென, மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
எழுத்து தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களே, உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

