/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முருகன் கோவிலில் இரண்டரை மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
முருகன் கோவிலில் இரண்டரை மணி நேரம் காத்திருந்து தரிசனம்
முருகன் கோவிலில் இரண்டரை மணி நேரம் காத்திருந்து தரிசனம்
முருகன் கோவிலில் இரண்டரை மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : நவ 10, 2025 01:50 AM

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வார விடுமுறை நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதனால், பொது வழியில் இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், வார விடுமுறை நாளான நேற்று, மூலவரை தரிசிக்க மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
சில பக்தர்கள் மொட்டை அடித்து, காவடி எடுத்து வந்து மூலவரை தரிசித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி - தெய்வானையுடன் தங்கத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

