/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் சாலை பள்ளங்களால் விபத்து அபாயம்
/
திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் சாலை பள்ளங்களால் விபத்து அபாயம்
திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் சாலை பள்ளங்களால் விபத்து அபாயம்
திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் சாலை பள்ளங்களால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 30, 2025 02:26 AM

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் சாலையில் உள்ள பள்ளங்களால் விபத்து அபாயம் உள்ளது.
திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் நெடுஞ்சாலையில், ஆங்காங்கே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்ளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரான திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் வெள்ளியூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மற்றும் இணைப்பு சாலை வழியே 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் பெரும்பாலான கனரக வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றன. செங்குன்றம், பூச்சி அத்திப்பேடு, தாமரைப்பாக்கம், வெள்ளியூர் வழியே திருவள்ளூருக்கு தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
மேலும், திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இந்த சாலையில், அரசு மேனிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை உள்ளன.
போக்குவரத்து நெரில் மிகுந்த இச்சாலையில், குடிநீருக்காக அமைக்கப்பட்ட குழாய்கள் சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் சாலை சேதம் அடைந்து பள்ளம் உருவாகிறது.
சில இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் ஜல்லிக்கற்களை கொட்டி விடுகின்றனர். இரவு நேரங்களில் இச்சாலை வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த பள்ளங்களில் விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே, மாவட்ட நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் இடையே சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.