/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாள் முழுதும் மின்வெட்டு மின்வாரியம் முற்றுகை
/
நாள் முழுதும் மின்வெட்டு மின்வாரியம் முற்றுகை
ADDED : ஏப் 23, 2025 09:39 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பொன்னேரி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் நடைபெறுகிறது.
நேற்று காலை 8:00 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது. வழக்கமான மின்வெட்டு, சிறிது நேரத்தில் வந்துவிடும் என நினைத்த கிராமவாசிகள், மாலை 6:00 மணி ஆகியும் வராததால் அதிருப்தி அடைந்தனர்.
அதிகாரிகளின் மொபைல் போன்கள் 'சுவிட்ச் ஆப்' என வந்தது. இதனால், கொதிப்படைந்த கிராமவாசிகள், நேற்று இரவு 8:00 மணிக்கு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
'எந்தவொரு முன்னறிவிப்பு இன்றி நாள் முழுதும் மினசாரம் நிறுத்தப்பட்டிருப்பது ஏன்' எனக் கேட்டு, அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக' ஊழியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.