/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஞ்சாட்ர மலையில் பிரதோஷ வழிபாடு
/
பஞ்சாட்ர மலையில் பிரதோஷ வழிபாடு
ADDED : நவ 28, 2024 08:19 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது பஞ்சாட்சர மலை. இந்த மலையின் உச்சியில், 700 ஆண்டுகள் பழமையான மரகதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் கட்டுமானம் சிதைந்துள்ள நிலையில், திறந்தவெளியில் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.
இந்ந கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி கிரிவலம் உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகின்றன. 45ம் பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது.
இதில், திரளான சிவனடியார்கள் பங்கேற்று சுவாமிக்கு அபிஷேகம் நடத்தினர். அதை தொடர்ந்து, மரகதேஸ்வரர் தலைப்பாகை அணிந்து மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அதேபோல், வீராணத்துார் வீரட்டானேஸ்வரர், நாகபூண்டி நாகேஸ்வரர், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேசனார், வங்கனுார் வியாசேஸ்வரர், பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர், பொம்மராஜபேட்டை ஜம்புலிங்கேஸ்வரர், புத்தேரி சிவகிரி சாமுண்டீஸ்வரர், ஆர்.கே.பேட்டை விசாலீஸ்வரர், சோளிங்கர் சோழபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும், நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது.