/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகப்பேறு நிதியுதவி கிடைப்பதில்லை திருவாலங்காடு கர்ப்பிணியர் வேதனை
/
மகப்பேறு நிதியுதவி கிடைப்பதில்லை திருவாலங்காடு கர்ப்பிணியர் வேதனை
மகப்பேறு நிதியுதவி கிடைப்பதில்லை திருவாலங்காடு கர்ப்பிணியர் வேதனை
மகப்பேறு நிதியுதவி கிடைப்பதில்லை திருவாலங்காடு கர்ப்பிணியர் வேதனை
ADDED : செப் 17, 2025 09:35 PM
திருவாலங்காடு:திருவாலங்காடில் மகப்பேறு நிதி கிடைக்கவில்லை என, கர்ப்பிணியர் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு சார்பில், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், கர்ப்பிணியர் கருத்தரித்த 12 வாரத்துக்குள், ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விபரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, 'பிக்மி' எண் பெற வேண்டும்.
உடல்திறனை மேம்படுத்தும் வகையில் சத்துமாவு, இரும்புச்சத்து டானிக், பிளாஸ்டிக் கப், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய 2,000 ரூபாய் மதிப்பிலான பெட்டகம் இரண்டு முறை வழங்கப்படுகிறது.
அதன்படி, கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் 6,000 ரூபாய், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் 6,000 ரூபாய், ஒன்பதாவது மாதத்தில் 2,000 ரூபாய் என, 14,000 ரூபாய் வழங்கப்படுகின்றன.
இந்த மகப்பேறு நிதியுதவி, திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என, அப்பகுதி கர்ப்பிணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், உடல்நலனை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசின் நிதியின்றி கர்ப்பிணியர் சிரமப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசின் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி கர்ப்பிணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.