/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றோருக்கு பிரதமர் தொழில் பழகுநர் பயிற்சி
/
ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றோருக்கு பிரதமர் தொழில் பழகுநர் பயிற்சி
ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றோருக்கு பிரதமர் தொழில் பழகுநர் பயிற்சி
ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றோருக்கு பிரதமர் தொழில் பழகுநர் பயிற்சி
ADDED : அக் 06, 2025 11:10 PM
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில், ஐ.டி.ஐ., படித்தோர் பிரதமர் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில், வரும் 13ம் தேதி காலை 9:00 மணிக்கு, பல்வேறு தொழில் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு, 'பிரதமர் தொழில் பழகுநர் பயிற்சி' முகாம் நடக்கிறது.
மத்திய - மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, பயிற்சி அளிக்க உள்ளன.
ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றோர், தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து, மத்திய அரசின் என்.ஏ.சி., சான்றிதழ் பெற்று பயனடையலாம்.
மேலும் விபரங்களை அறிய, திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரி லோ, dstotvlr2025@gmail.com என்ற 'இ - மெயில்' மற்றும் 94990 55663, 82483 33532 ஆகிய மொ பைல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.