/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் - லாரி மோதல் தனியார் ஊழியர் உயிரிழப்பு
/
பைக் - லாரி மோதல் தனியார் ஊழியர் உயிரிழப்பு
ADDED : அக் 06, 2025 01:56 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே பைக் - லாரி மோதிய விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ், 40.
புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, மனைவி மற்றும் மகள், மகன் உள்ளனர்.
இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, காக்களூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று, ஊத்துக்கோட்டைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
காக்களூர் பைபாஸ் சாலையில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதினார்.
இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.