/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிப்பர் லாரியில் பைக் மோதி தனியார் ஊழியர் உயிரிழப்பு
/
டிப்பர் லாரியில் பைக் மோதி தனியார் ஊழியர் உயிரிழப்பு
டிப்பர் லாரியில் பைக் மோதி தனியார் ஊழியர் உயிரிழப்பு
டிப்பர் லாரியில் பைக் மோதி தனியார் ஊழியர் உயிரிழப்பு
ADDED : அக் 30, 2024 12:45 AM

புழல்:போரூர், தாழம்பூ தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 44; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வியாசர்பாடியில் இருந்து 'ஹோண்டா' ைஷன்' பைக்கில் வீடு திரும்பினார்.
புழல், சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது பைக் மோதியதில், தடுமாறி விழுந்த ஜெயபிரகாஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு 108 ஆம்புலன்சில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், போகும் வழியிலேயே ஜெயபிரகாஷ் உயிரிழந்தார்.
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
டிப்பர் லாரியை ஓட்டுனரான பொன்னேரியைச் சேர்ந்த மூர்த்தி, 38, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.