திருவள்ளூரில் வரும் 20ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
திருவள்ளூரில் வரும் 20ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
UPDATED : நவ 14, 2026 02:40 PM
ADDED : நவ 14, 2026 02:34 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், வரும் 20ம் தேதி நடைபெற உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் வேலை வாய்ப்பு முகாம், வரும் 20ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெற உள்ளது.
அதில், 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில், பங்கேற்க விருப்பமுள்ளோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம்.
இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
