/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் பள்ளி பங்குதாரர் மரணம் உறவினர்கள் சாலை மறியல்
/
தனியார் பள்ளி பங்குதாரர் மரணம் உறவினர்கள் சாலை மறியல்
தனியார் பள்ளி பங்குதாரர் மரணம் உறவினர்கள் சாலை மறியல்
தனியார் பள்ளி பங்குதாரர் மரணம் உறவினர்கள் சாலை மறியல்
ADDED : மார் 26, 2025 08:20 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தானப்பன், 48. இவர், அம்மையார்குப்பம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பங்குதாரராக இருந்து வந்தார். உடல்நல குறைவால் நேற்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது உறவினர்கள், பங்கு தொகையை கேட்டு நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், பள்ளிக்கு எதிரே உள்ள ஆர்.கே.பேட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். சாலை மறியலால், ஆர்.கே.பேட்டை - அம்மையார்குப்பம் செல்லும் சாலையில், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.