/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்த தடை
/
மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்த தடை
மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்த தடை
மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்த தடை
ADDED : செப் 28, 2025 01:41 AM

திருவள்ளூர்:'மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், தனியார் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி, வனம், வேளாண்மை, ஆயுதப்படை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இவற்றில், மாவட்ட காவல் அலுவலக சாலை மற்றும் மருத்துவக்கல்லுாரி பகுதியில் உள்ள சாலைகளில், தனியார் நிறுவன பேருந்துகள் மற்றும் கார்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் அருகே, இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் கஞ்சா, மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், மறுநாள் காலை சாலை முழுதும் காலி மது பாட்டில் உள்ளிட்ட குப்பை சேகரமாகிறது. மருத்துவக்கல்லுாரி மாணவ - மாணவியர், அரசு அலுவலர்கள், இச்சாலையில் செல்லும் போது, முகம் சுளித்து வந்தனர்.
இதை தடுக்கும் வகையில், மருத்துவக்கல்லுாரி அமைந்துள்ள சாலையில், கனரக வாகனங்கள் செல்லாத வகையில், தாழ்வான தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், அந்த சாலையிலும், மாவட்ட காவல் அலுவலகம் அமைந்துள்ள சாலையிலும், 'தனியார் வாகனங்கள் நிறுத்தக் கூடாது. மீறினால், மோட்டார் வாகன சட்டப்படி, 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்ற எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.