/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக்கி ஆரணி ஆற்றில் விடுவதற்கு திட்டம் பொன்னேரியில் குழாய் பதிப்பு பணி வேகம்

ADDED : ஏப் 05, 2025 02:43 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில் முதல்கட்டமாக, 62.82 கோடி ரூபாயில், 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்ட பணி மேற்கொள்ளப்படுகிறது. தெருக்களில் குழாய் பதிப்பது, கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து உள்ளன.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுரை வெளியேற்றுவதற்காக, ஏற்கனவே தெருக்களில் பதித்த குழாய்களுடன், 'இன்டர்னல் பிளம்பிங்' முறையில் இணைக்கும் பணிகளும் நடைபெறுகிறது.
நகராட்சியில் உள்ள, 7,605 குடியிருப்புகளில் இருந்து வெளியேற உள்ள கழிவுரை சுத்திகரித்து, ஆரணி ஆற்றில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பெரியகாவணம் பகுதியில் தினமும், 60 லட்சம் லிட்டர் கழிவுரை சுத்திகரிப்பதற்கான ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கொண்டு வரப்படும் கழிவுநீர், பல்வேறு நிலைகளில் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, குளோரின் கலந்து நன்னீராக மாற்றி, 3 கி.மீ., தொலைவில் ஆரணி ஆற்றில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக தற்போது, பொன்னேரி - பெரும்பேடு சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு குழாய்கள் பதிக்கப்படுகிறது.
பாதாள சாக்கடை திட்டத்திற்கான பெரும்பால பணிகள் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதாகவும், விரைவில் திட்டம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.