/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
7 நாட்களும் சொத்து வரி செலுத்தலாம்
/
7 நாட்களும் சொத்து வரி செலுத்தலாம்
ADDED : பிப் 22, 2024 01:06 AM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 13,498 பேர் சொத்து வரியும், 2,539 பேர் காலிமனை வரியும், 89 பேர் தொழில்வரியும், 1,592 பேர் குடிநீர் வரியும், நகராட்சியின் கடைகளுக்கு, 156 பேர் வாடகையும், 12,386 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு சர்வீஸ் கட்டணம் என ஆண்டுக்கு, 6.07 கோடி ரூபாய் நகராட்சி நிர்வாகம் வசூலிக்கிறது.
நடப்பாண்டிற்கான மொத்த வரியும், வசூலிக்க அடுத்த மாதத்திற்குள் திட்டமிட்டு, நகராட்சி அலுவலர்கள் தீவிர வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, நேற்று வரை, 2.32 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்தாமல் உள்ளனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் வரி செலுத்தாத கடைகள் மற்றும் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியை துவக்கியுள்ளது.
இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் கூறுகையில், ''நகராட்சியில் சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து ரக வரிகளும் விரைந்து செலுத்த வேண்டும்.
''தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். வாரத்தில் ஏழு நாட்களும், நகராட்சி அலுவலகத்தில் வரி செலுத்தலாம்,'' என்றார்.