/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ்சில் குட்கா கடத்தியவருக்கு காப்பு'
/
பஸ்சில் குட்கா கடத்தியவருக்கு காப்பு'
ADDED : டிச 24, 2024 11:23 PM
திருத்தணி:ஆந்திராவில் இருந்து, திருத்தணி பகுதிக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று, திருத்தணி போலீசார் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, திருப்பதியில் இருந்து, சென்னை செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில், ஒரு பயணியின் பையில், 10 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், நகரி பகுதியைச் சேர்ந்த அருண், 32 என்றும், குட்கா பொருட்கள் திருவள்ளூர் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தார் என்பதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து திருத்தணி போலீசார் அருணை கைது செய்தனர்.