தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 09, 2024 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி:பொன்னேரி துணை மின்நிலைய வளாகத்தில், நேற்று மாலை, தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பளாயீஸ் பெடரெஷனின், சென்னை வடக்கு மின்திட்ட பிரிவு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில அமைப்பு செயலர் நாராயணமூர்த்தி, சென்னை வடக்கு பிரிவு திட்ட ஆலோசகர் நஞ்சுண்டராவ் அமைப்பின் மாநில பொதுசெயலர் சேக்கிழார் பங்கேற்று பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, சோலார்பேன் அமைத்து கொள்ள மக்களிடம் அறிவுறுத்தும் பணியினை மின்வாரிய ணியாளர்கள்தான் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலை திரும்ப பெறவேண்டும்.

'மொபைல் ஆப்' வாயிலாக மின் கணக்கீடு செய்யும் பணிக்கு உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்; 100க்கும் அதிகமான பொறியாளர் பதவிகளை ஒழிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; கடந்த மாதம், 12ம் தேதி போடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்; தொழிற்சங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தனிச்சையாக போடப்பட்ட ஒப்பந்தத்தினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us