/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுத்திகரிப்பு தண்ணீரை ஆற்றில் விட எதிர்ப்பு தொடரும் போராட்டம்: 120 பேர் அதிரடி கைது
/
சுத்திகரிப்பு தண்ணீரை ஆற்றில் விட எதிர்ப்பு தொடரும் போராட்டம்: 120 பேர் அதிரடி கைது
சுத்திகரிப்பு தண்ணீரை ஆற்றில் விட எதிர்ப்பு தொடரும் போராட்டம்: 120 பேர் அதிரடி கைது
சுத்திகரிப்பு தண்ணீரை ஆற்றில் விட எதிர்ப்பு தொடரும் போராட்டம்: 120 பேர் அதிரடி கைது
ADDED : ஆக 20, 2025 02:08 AM

பொன்னேரி:ஆரணி ஆற்றில் கழிவுநீர் விடுவதாக கூறி, இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 120 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்புகளின் கழிவுநீர் சுத்திகரித்து, ஆரணி ஆற்றில் விடுவதற்கு திட்டமிட்டு, கடந்த பிப்ரவரியில் அதற்கான பணி துவங்கியது.
கழிவுநீர் கலப்பு இதற்கு, ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கழிவுநீர் கலப்பதால், ஆற்றுநீர் மாசடைந்து, வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறினர். இதனால், குழாய் பதிக்கும் பணி பாதித்தது.
நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் குழாய் பதிக்கும் பணிகள் துவக்கப்பட்டன.
அப்போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். குழாய் பதிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
பணிகள் விறுவிறு நேற்று இரண்டாவது நாளாக லட்சுமிபுரம், கம்மவார்பாளையம், மனோபுரம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள், பொன்னேரி - பழவேற்காடு சாலையில் திரண்டு, ஆரணி ஆற்றில் கழிவுநீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தயார் நிலையில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
பின், தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை, பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், முன்னாள் எம்.எம்.ஏ., பலராமன் ஆகியோர் நேரில் சந்தித்து, பிரச்னை குறித்து கேட்டறிந்தனர்.
இதற்கிடையே, ஐந்து பொக்லைன் இயந்திரங்கள், ஒரு கிரேன் ஆகியவற்றின் உதவியுடன், குழாய் பதிப்பு பணிகள் விறுவிப்பாக நடந்து வருகிறது.