/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முருகன் கோவில் நிறுவப்படும் இடத்தை அளவீடு செய்ய எதிர்த்து ஆர்ப்பாட்டம்
/
முருகன் கோவில் நிறுவப்படும் இடத்தை அளவீடு செய்ய எதிர்த்து ஆர்ப்பாட்டம்
முருகன் கோவில் நிறுவப்படும் இடத்தை அளவீடு செய்ய எதிர்த்து ஆர்ப்பாட்டம்
முருகன் கோவில் நிறுவப்படும் இடத்தை அளவீடு செய்ய எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 23, 2025 11:04 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் அருகே முருகன் கோவில் இடத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் அருகே முருகன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், தற்போது இறுதி கட்டடத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், கோவில் அமையும் இடம், வருவாய் ஆவணங்களின்படி பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட இடம். அதை மீட்க வேண்டும் என, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் வருவாய் துறைக்கு மனு அளித்தாக கூறப்படுகிறது.
அதன்படி, கோவில் அமையும் இடம், ஊராட்சிக்கு சொந்தமான பாடசாலை இடமா என்பதை கண்டறிந்து எல்லைக்கல் நடுவதற்கு, வருவாய் துறை மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர் நேற்று ஆத்துப்பாக்கம் கிராமத்திற்கு வந்தனர்.
அளவீடு செய்ய வந்த அரசு துறை அலுவலர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் சிலர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கிராம மக்கள் கூறியதாவது:
இந்த இடம் பாடசாலைக்கு சொந்தமான இடம் என, வருவாய் துறை ஆவணங்களில் தவறாக உள்ளது. கோவில் வழிபாட்டிற்காக, 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்.
கோவில் பெயரில் பட்டா வழங்க வலியுறுத்தி, ஏற்கனவே வருவாய் துறையிடம் மனு அளிக்கப்பட்டது.
ஒரு சிலர் வேண்டுமென்றே அளித்த புகாரின் அடிப்படையில் உரிய ஆய்வு செய்யாமல், கோவில் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில், இடத்தை அளவீடு செய்ய அனுமதிக்கமாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தாசில்தார் தலைமையில் பேச்சு நடத்துவது என, முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து, அரசு அலுவலர்கள் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.