/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்
/
தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்
தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்
தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 24, 2025 09:49 PM
திருவள்ளூர்:தொடுகாடு பகுதி மக்கள், பட்டா கேட்டு, தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில், சர்வே எண் 241/4ல், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, பலமுறை மனு கொடுத்தும், இதுவரை தீர்வு ஏற்ப்படவில்லை.
தொடுகாட்டில் குடியிருக்கும் மக்களிடம் தனிநபர் ஒருவர், இந்த நிலம் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது. எனவே, உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என, 'நோட்டீஸ்' வழங்கியுள்ளார். இதையடுத்து, அப்பகுதி மக்கள், திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில், பல ஆண்டுகளாக மனு அளித்து வந்தனர்.
கடந்த 15ம் தேதி திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் பகுதி மக்களுடன், அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அப்போது, மக்கள் குடியிருக்கும் நிலம் எந்த வகைப்பாட்டை சேர்ந்தது என்று தெரியாத நிலையில், ஹிந்து அறநிலையத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, விசாரணை நடக்கிறது.
இது, அறநிலையத் துறைக்கு சொந்தமானது இல்லை என்று தகவல் வரும் பட்சத்தில், உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் பாலாஜி எழுத்து பூர்வமாக தெரிவித்திருந்தார்.
நேற்று மீண்டும் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தாசில்தார் பாலாஜி 'தொடுகாட்டில், மக்கள் குடியிருக்கும் நிலம் அறநிலைய துறைக்கு சொந்தமானது இல்லை என, தெரிய வந்துள்ளது.
'அடுத்த கட்டமாக, திருவள்ளூர் கோட்டாட்சியர் மற்றும் கலெக்டரிடம் பேசி, பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார். இதனையடுத்து, காத்திருக்கும் போராட்டம் முடிவிற்கு வந்தது.