/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அராபத் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்
/
அராபத் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்
ADDED : அக் 16, 2025 01:00 AM

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலையை ஒட்டி நீர்வளத்துறைக்கு சொந்தமான அராபத் ஏரி உள்ளது. 65 ஏக்கர் பரப்புடைய இந்த ஏரி, ஆக்கிரமிப்புகளால் 38 ஏக்கராக சுருங்கி உள்ளது.
இந்த ஏரியைச் சுற்றி, மணிகண்டபுரம், சரவணா நகர் மற்றும் ஸ்ரீனிவாசா நகர் பகுதிகளில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் கலக்கிறது. இதனால் மாசடைந்த ஏரி நீரில் சுவாசிக்க முடியாமல், இம்மாதம் 7ம் தேதி, 3 டன் ஜிலேபி மீன்கள் செத்து மிதந்தன.
இந்நிலையில், புழல் ஏரி, அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலையில் நேற்று காலை, காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அராபத் ஏரியை உடனடியாக துார்வாரி, கரைகளை பலப்படுத்தி, மழைநீரை தேக்கும் வகையில் மதகு அமைக்க வேண்டும் என, கோஷங்களை எழுப்பினர்.