/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே சுரங்கப்பாதை கேட்டு கடம்பத்துாரில் ஆர்ப்பாட்டம்
/
ரயில்வே சுரங்கப்பாதை கேட்டு கடம்பத்துாரில் ஆர்ப்பாட்டம்
ரயில்வே சுரங்கப்பாதை கேட்டு கடம்பத்துாரில் ஆர்ப்பாட்டம்
ரயில்வே சுரங்கப்பாதை கேட்டு கடம்பத்துாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 29, 2025 07:37 AM
கடம்பத்துார்: கடம்பத்துார் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை கேட்டு நேற்று த.வெ.க., வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடம்பத்துார் ரயில் நிலையம் பகுதியில் கடந்த 2015ல் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட ரயில்வே மேம்பால பணி நிறைவடைந்து, 2022ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இதையடுத்து, கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டதால், 2022 டிசம்பரில், 5.50 கோடி ரூபாய் மதிப்பில், 300 அடி நீளம், 16 அடி அகலம், 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கியது.
ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டு துவங்கிய பணிகள் மூன்று ஆண்டுகளாகியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி கடம்பத்துார் மேற்கு ஒன்றிய த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதில், த.வெ.க., கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலர் விமல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் பிரகாசம் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

