/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை வசதி கேட்டு ஒண்டிக்குப்பத்தில் போராட்டம்
/
சாலை வசதி கேட்டு ஒண்டிக்குப்பத்தில் போராட்டம்
ADDED : நவ 12, 2024 07:26 AM

மணவாளநகர்: கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள இ.ஏ.பி., சிவாஜி நகர். இப்பகுதியில் சேதமடைந்த சாலையால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
பகுதிவாசிகள் கோரிக்கையை அடுத்து இப்பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு முன் 250 மீட்டர் நீளத்தில் 11.90 லட்சம் மதிப்பில் சாலை சீரமைக்க ஒன்றிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் இன்று வரை சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரம்அடைந்த இப்பகுதியில் நேற்று கடம்பத்துார் கிழக்கு பா.ஜ., ஒன்றிய செயலர் ஏழுமலை தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் திரண்டனர்.
தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா, மணவாளநகர் ஆய்வாளர்கள் வெற்றி செல்வன், சத்தியபாமா மற்றும் மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு நடத்தினர்.
இதையடுத்து ஆய்வாளர் வெற்றிசெல்வன், கடம்பத்துார் ஒன்றிய அதிகாரி செல்வகுமாரிடம் பேச்சு நடத்தி ஒரு வார காலத்தில் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதைஅடுத்து பகுதிவாசிகள் கலைந்து சென்றனர்.