/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுத்தீவன விதை வழங்கல்
/
கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுத்தீவன விதை வழங்கல்
கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுத்தீவன விதை வழங்கல்
கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுத்தீவன விதை வழங்கல்
ADDED : ஜன 21, 2025 07:09 PM
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கால்நடை வளர்த்தும் பராமரித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, கால்நடை துறையின் சார்பில், நஞ்சை சாகுபடி மற்றும் மானாவாரி சாகுபடி நிலத்தில், விவசாயிகள் பசுத்தீவனம் பயிரிடுவதற்கு விதைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளனர்.
இது குறித்து, திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது:
மாநில தீவனம் அபிவிருத்தி திட்டம், 2024 - 25ம் ஆண்டின் கீழ் பசுத்தீவனம் பயிரிடுவதற்கு வருவாய் கோட்டத்தில் மானாவாரி சாகுபடியில், 70 ஏக்கர், நஞ்சை சாகுபடியில், 40 ஏக்கர் என, மொத்தம், 110 ஏக்கரில், சோளம் மற்றும் காராமணி தீவன விதைகள், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
குறைந்தபட்சம், அரை ஏக்கர் முதல், அதிகபட்சமாக இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் தீவன பயிரிடுவதற்கு விதைகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு பயனாளிகள் கால்நடை மருந்தக உதவி மருத்துவர்கள் வாயிலாக விண்ணப்பம் பெற்றும், கலெக்டர் ஒப்புதல் பெறப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
இந்த விதைகள், அரை ஏக்கருக்கு, 6 கிலோ சோளம், 2 கிலோ காராமணி வழங்கப்படும். இந்த விதைகள் மொத்த மதிப்பு, 800 ரூபாயாகும். இதில், 400 ரூபாய் மட்டும் கால்நடை உதவி மருத்துவர்களிடம் கொடுத்து விதைகள் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் தீவன பயிருக்கு, 600 ரூபாய் மதிப்புள்ள உரம் வழங்கப்படுகிறது. இதில், 50 சதவீதம் மானியமாக, 300 ரூபாய் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.