/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மானிய விலை இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கல்
/
மானிய விலை இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : டிச 19, 2024 11:57 PM
திருத்தணி, திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். குறிப்பாக, விவசாயிகள் அதிகளவில் நெல், வேர்க்கடலை, கரும்பு மற்றும் சவுக்கு போன்ற பயிர்கள் பயிரிடுகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் வழங்குவதற்கு தீர்மானித்து, ஆன் - லைன் வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்டு விவசாயிகளுக்கு விவசாய பணிக்கு தேவையான கருவிகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து திருத்தணி வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விவசாயிகளுக்கு வேளாண் துறையின் வாயிலாக மானிய விலையில் கடப்பாறை, மம்முட்டி, இரண்டு அரிவாள், ஒரு கலைக்கொத்தி போன்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்த பொருட்களின் மொத்த அடக்கவிலை, 2,993 ரூபாயாகும். இதில், விவசாயிகளுக்கு மானியமாக, 1,460 ரூபாய் வழங்கப்படுகிறது. மீதமுள்ள, 1,533 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மானியம் பெறுவதற்கு விவசாயிகளின் ஆதார் கார்டு, இரண்டு பாஸ்போர்ட்போட்டோ, நிலத்தின் சர்வே எண், சிட்டா, அடங்கல் ஆகியவற்றுடன் ஆன் - லைன் வாயிலாக விண்ணப்பித்து, திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில் இயங்கி வரும், வேளாண் விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.