/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு பி.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
/
சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு பி.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு பி.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு பி.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
ADDED : ஜன 11, 2024 11:14 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே பூவலை கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள், சுடுகாட்டுக்கு பாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி மூன்று ஆண்டு காலமாக போராடி வருகின்றனர்.
ஆக்கிரமிப்பில் உள்ள சுடுகாட்டுக்கு பாதையில் சாலை அமைத்து, சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்படும் என அரசு தரப்பில் எழுத்துப் பூர்வர்மாக உறுதி அளிக்கப்பட்டது.
இருப்பினும் அதை செயல்படுத்தாத ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பூவலை கிராம மக்கள், 100 பேர் நேற்று நுாதன போராட்டம் மேற்கொண்டனர். பூவலை கிராமத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் வரை, 18 கி.மீ., தொலைவு, மேள தாளங்கள் முழங்க, தாம்பூலத் தட்டுகளுடன் நடைபயணமாக சென்று பி.டி.ஓ., அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
பி.டி.ஓ., அலுவலக வாசலில், தாம்பூலத் தட்டுகளை வைத்து அமர்ந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர் சமாதானம் செய்தனர். உடனடியாக பணி மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின் கலைந்து சென்றனர்.