/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பறிமுதல் வாகனங்கள் 18ம் தேதி பொது ஏலம்
/
பறிமுதல் வாகனங்கள் 18ம் தேதி பொது ஏலம்
ADDED : பிப் 12, 2025 09:18 PM
திருவள்ளூர்:குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 18ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் குடிமை பொருள் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
பொது விநியோக திட்ட பொருட்களுடன்கூடிய வாகனங்கள் கைப்பற்றிய விபரம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கரம் என, 47 வாகனங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குடிமைப் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பதற்கு, கடத்தி சென்ற குற்றத்திற்காக அபராதம் விதித்து ஆணையிடப்பட்டது.
வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வாகன உரிமையாளர்கள் இதுவரை செலுத்தி வாகனங்களை மீட்டு கொள்ளவில்லை.
எனவே, அவற்றினை உரிமை கோரப்படாத வாகனங்களாகக் கருதி, அரசுக்கு ஆதாயம் செய்து அவற்றை நேரடி பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாகனங்களை ஏலம் கோர விரும்புவோர், வரும் 18ம் தேதி, திருவள்ளூர் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறை அலுவலகத்தில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.