ADDED : செப் 26, 2024 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டியில், நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடந்த முகாமில், வேளாண், சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், 27 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, 25 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை என, பல்வேறு திட்டங்களின் கீழ், 112 பேருக்கு, 34 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன.

