/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பார்க்கிங்காக மாறிய மக்கள் அமரும் இடம்

ADDED : பிப் 12, 2025 01:39 AM

செவ்வாப்பேட்டை:திருவள்ளூர் அடுத்துள்ளது ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செவ்வாப்பேட்டை காவல் நிலையம்.
செவ்வாப்பேட்டை அடுத்த, திருவூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 2005ம் ஆண்டு, துணை சுகாதார நிலைய கட்டடத்தில், காவல் நிலையம் இயங்கி வந்தது.
இடநெருக்கடியில் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வந்த காவல் நிலையத்தை, அப்போதைய ஆவடி மாநகர ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்படி, திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில், 2023ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல், தனியார் பள்ளி கட்டடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட பொதுமக்கள் அமரும் இடம் வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், பொருட்கள் வைக்கும் கிடங்காகவும் மாறியுள்ளது.
இதனால் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட காவல் உயரதிகாரிகள், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அமரும் வகையில் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.