/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாகாத்தம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா
/
நாகாத்தம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா
ADDED : அக் 21, 2024 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை உத்திரக்குளம் பகுதியில், நாகாத்தம்மன் மற்றும் சின்ன புட்லுார் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று இக்கோவிலில், 12ம் ஆண்டு கூழ் ஊற்றும் திருவிழா நடந்தது.
இதை முன்னிட்டு, நேற்று காலை 100க்கும் மேற்பட்ட பெண்கள், அம்மனுக்கு பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆரத்தி நடைபெற்றன.
மாலை ஊர் கூடி பொங்கல் வைத்தல், கும்பம் போடுதல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. திருவிழாவில், கவரைப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.