/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி சாலை படுமாசம் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்
/
பொன்னேரி சாலை படுமாசம் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்
பொன்னேரி சாலை படுமாசம் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்
பொன்னேரி சாலை படுமாசம் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்
ADDED : ஏப் 20, 2025 01:01 AM

பொன்னேரி,
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில் இருந்து, ஆலாடு சாலை வரை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிய சாலை அமைக்கப்பட்டது. சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், சில மாதங்களில் ஆங்காங்கே பெயர்ந்தும், உள்வாங்கியும் சேதமடைந்தது.
சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்ட இடங்களில், சாலையை முழுமையாக சீரமைக்காமல், கண்துடைப்புக்காக சரளை கற்களை கொட்டி நகராட்சி நிர்வாகம் சீரமைத்தது. இதனால், வாகன ஓட்டிகள் சிதறி கிடக்கும் சரளை கற்களில் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சிறுசிறு விபத்துகளுக்கும் உள்ளாகின்றனர்.
வேண்பாக்கம், ஆலாடு, சிவபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும், சக்தி நகர், சாமூண்டீஸ்வரி நகர், மாதவன் நகர் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளும், இந்த சாலையை பயன்படுத்தும் நிலையில், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.