/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எட்டு மாதமாக பூட்டியே கிடக்கும் புட்லுார் துணை சுகாதார நிலையம்
/
எட்டு மாதமாக பூட்டியே கிடக்கும் புட்லுார் துணை சுகாதார நிலையம்
எட்டு மாதமாக பூட்டியே கிடக்கும் புட்லுார் துணை சுகாதார நிலையம்
எட்டு மாதமாக பூட்டியே கிடக்கும் புட்லுார் துணை சுகாதார நிலையம்
ADDED : நவ 19, 2025 05:18 AM

புட்லுார்: புட்லுார் துணை சுகாதார நிலையத்திற்கு திறப்பு விழா நடத்தப்பட்டு எட்டு மாதமாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.
திருவள்ளூர் ஒன்றியம் புட்லுார் கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில், 8,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடம் சேதமடைந்து இருந்தது. இதையடுத்து, புட்லுார் தோப்பு புறம்போக்கு நிலத்தில், 650 ச.மீ., பரப்பளவில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டும் பணி, 2022ல் துவங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் கட்டட பணி நிறைவடைந்தது. கடந்த ஏப்., 18ம் தேதி முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக, துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.
திறப்பு விழா கண்டு, எட்டு மாதங்களாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே போடப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் கர்ப்பிணியர், 5 கி.மீ., பயணித்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
எனவே, துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

