/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
/
திருத்தணியில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
திருத்தணியில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
திருத்தணியில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
ADDED : நவ 19, 2025 05:19 AM

திருத்தணி: சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
திருத்தணி நகராட்சியில் அரக்கோணம் சாலை, பேருந்து நிலையம், சன்னிதி தெரு, காந்திரோடு, சித்துார் சாலை, அக்கைய்ய நாயுடு சாலை, பைபாஸ், ம.பொ.சி.சாலை ஆகிய இடங்களில், அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், கால்நடை உரிமையாளர்கள் சிலர், தங்கள் மாடுகளை தொழுவத்தில் வைத்து பராமரிக்காமல் சாலையில் திரிய விடுகின்றனர். இதனால், சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், ஆங்காங்கே ஓய்வெடுக்கின்றன.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக, திருத்தணி - அரக்கோணம் சாலை மற்றும் பேருந்து நிலையத்தில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. ஆனால், மாடுகளை பிடிக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, திருத்தணியில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

