/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்கூட்டர் மீது லாரி மோதி புழல் பெண் பரிதாப பலி
/
ஸ்கூட்டர் மீது லாரி மோதி புழல் பெண் பரிதாப பலி
ADDED : ஜூலை 04, 2025 02:39 AM
புழல்:ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், புழல் பகுதியைச் சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
புழல் அடுத்த பிரிட்டானியா நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 50. இவர், ஓசூரில் உள்ள டி.வி.எஸ்., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி கவிதா, 46.
கவிதாவின் தம்பி மாதவரம் ரவுண்டானா பகுதியில் இரும்பு பட்டறை கடை நடத்தி வருகிறார். நேற்று முற்பகல் 11:00 மணியளவில், கவிதா அங்கு சென்றுள்ளார்.
தம்பியை பார்த்துவிட்டு, தன் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
ரெட்டேரி அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டு பகுதி, கவிதாவின் ஸ்கூட்டரில் உரசியுள்ளது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த கவிதாவின் மீது, லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கன்டெய்னர் லாரி ஓட்டுநரான மணிசிங், 35, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.