தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நண்பர்களிடையே தகராறு :உறவினர்களுக்கு வெட்டு

 நண்பர்களிடையே தகராறு :உறவினர்களுக்கு வெட்டு

 நண்பர்களிடையே தகராறு :உறவினர்களுக்கு வெட்டு


ADDED : மார் 22, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: நண்பர்களிடையே நகை கொடுக்கல் - வாங்கல் தகராறில், இருவருக்கு சரமாரியாக வெட்டு விழுந்தது.

ஆவடி, ஆதி பராசக்தி நகரைச் சேர்ந்தவர் பிரவீன், 20; கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் மனோஜ், 20, என்பவருக்கு, அரை சவரன் நகையை அடமானம் வைத்து, பண உதவி செய்துள்ளார்.

நீண்ட நாட்களாகியும் மனோஜ் நகையை மீட்டு தராததால், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே நின்றிருந்த மனோஜை, பிரவீன் தகாத வார்த்தை பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த மனோஜ், காய்கறி நறுக்கும் கத்தியால் பிரவீனை வெட்ட முயன்ற போது, அதை தடுக்க முயன்ற பிரவீனின் சித்தப்பா முருகன், 55 மற்றும் அவரது மகன் மீது வெட்டு விழுந்தது.

அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us