/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு ஊழியர்களுக்கு நாளை வினாடி -- வினா போட்டி
/
அரசு ஊழியர்களுக்கு நாளை வினாடி -- வினா போட்டி
ADDED : டிச 19, 2024 11:59 PM
திருவள்ளூர், திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி - வினா போட்டி, நாளை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு திருக்குறள் முதல் நிலை வினாடி - வினா போட்டி, நாளை, மதியம் 2:00 மணிக்கு திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இதில், 3 குழுவில் 9 பேர் தேர்வு செய்யப்பட்டு, விருதுநகரில் 28ல் நடைபெறும் இறுதி போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். இறுதி போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு, முறையே 2, 1.50 மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
சிறந்த 3 குழுவிற்கு தலா 25,000 ரூபாய் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்குபெறும் அலுவலர்கள் தங்கள் அலுவலகம் வாயிலாக, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe6wsW3IfE6NhuS3Tbzy39CCTdZdaWuPA wEuTd_CXwjm78eg/viewform?usp=sharing என்ற கூகுள் படிவத்தில் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.