/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சிகளில் வரும் 16ல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
/
ஊராட்சிகளில் வரும் 16ல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஊராட்சிகளில் வரும் 16ல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஊராட்சிகளில் வரும் 16ல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ADDED : டிச 11, 2024 09:18 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம், வரும் 16ம் தேதி துவங்குகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம், அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 16ல் துவங்கி, ஜன.5 வரை நடக்கிறது.
குளிர் மற்றும் பனி காலத்தில் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால், கோமாரி நோய் பரவுகிறது.
இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீர், உமிழ்நீர், சாணம் ஆகியவை வாயிலாக மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.
எனவே, திருவள்ளுர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசு, எருது, எருமைகள் மற்றும் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக்குட்டி ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.